செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் பண கையிருப்பு தீர்ந்து விடும் அபாயம்

அமெரிக்காவின் பண கையிருப்பு தீர்ந்து விடும் அபாயம்

1 minutes read

அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள பணம் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் தீர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு நிதியமைச்சர் ஜேனட் எல்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செலவுகளை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.

அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு எல்லன் அனுப்பியுள்ள கடிதத்தில், பாராளுமன்றத்தின் நடவடிக்கையின்றி, அரசின் அனைத்து வித செலவின கோரிக்கைகளையும் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதிக்குப் பின்னர் நிறைவேற்றுவது என்பது முடியாத ஒன்றாகி விடும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஜனநாயக கட்சிகள் மற்றும் குடியரசு கட்சிகள் இடையே நீண்டகால மோதல் காணப்படுகிற நிலையில், எல்லனின் இந்த மதிப்பீட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா இந்த நெருக்கடியை சந்திக்க கூடிய சூழலில், உலகளாவிய பொருளாதாரம் பாதிக்கப்பட கூடும் என்ற ஆபத்தும் உள்ளது.

பைடனின் அறிவிப்பு

இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முக்கிய தலைவர்கள் 4 பேரை அடுத்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.