0
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.