Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பகிரங்கமாக 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயதான மதபோதகர்!

பகிரங்கமாக 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயதான மதபோதகர்!

0 minutes read

தென்னாப்பிரிக்காவின் கானா பகுதியில் 63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை, விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் திருமணம் செய்தமை மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தெரிவு செய்துவிட்டதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 வயதாகும் நுமோ போர்க்டே லாவ் ட்சூரு என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயது சிறுமியை பகிரங்கமாக திருமணம் செய்தார்.

திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதற்பு கானா நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், மதபோதகரை விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர்.

கானா சட்டம் குழந்தை திருமணங்களை தடை செய்வதுடன், கானாவில் திருமணத்துக்காக சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More