Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

1 minutes read

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் 62 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது உயிரிழந்திருக்கின்றனர்.

உலகின் மிகவும் வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ்.

62 வயதுடைய இவர்கள் 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாகப் பிறந்து இருக்கின்றனர்.

பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவிகித மூளையைப் பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் அப்போது கூறி இருகின்றனர்.

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நலப் பிரச்னையால் தற்போது உயிரிழந்திருக்கின்றனர். இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர்.

இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் அமைப்பு உட்பட உலக அமைப்புகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றன.

வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More