செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கிரீன் கட்சியின் புதிய எம்.பி. ஹன்னா ஸ்பென்சரின் நாடாளுமன்ற பயணம்…

கிரீன் கட்சியின் புதிய எம்.பி. ஹன்னா ஸ்பென்சரின் நாடாளுமன்ற பயணம்…

1 minutes read

கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற கிரீன் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஹன்னா ஸ்பென்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வெஸ்ட்மின்ஸ்டர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கிரீன் கட்சியின் முதல் எம்.பி. என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

34 வயதான ஹன்னா ஸ்பென்சர், வெற்றிக்குப் பிறகு தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரி, “நான் முன்பதிவு செய்திருந்த சில வேலைகளை இரத்து செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில், நான் இப்போது பாராளுமன்றம் செல்கிறேன். அங்கு என்னைப் போன்ற வேலை செய்யும் அனைவருக்கும் இடமளிப்பேன். நாமும் அரசியல் மேசையில் ஓர் இடத்தைப் பெறுவோம்,” எனத் தெரிவித்தார்.

16 வயதில் கல்வியை முடித்த அவர், பிளம்பர் தொழிலைத் தொடங்கினார். 2026ஆம் ஆண்டை “புதிய ஆண்டு, புதிய தொழில்” என்ற நோக்கத்துடன் தொடங்கிய அவர், முழுநேர பிளாஸ்டரிங் பயிற்சிக்காக மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்டோக் நகரிலுள்ள கல்லூரிக்குச் சென்று பயிற்சி பெறுவதோடு, கோர்டன் மற்றும் டென்டன் பகுதிகளில் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டார்.

சமீப ஆண்டுகளில் பிளாஸ்டரிங் பணிகளைத் தானாகவே கற்றுக்கொண்டதாகவும், ஒரு திட்டத்தின் பல்வேறு கட்டங்களையும் கையாளக் கூடிய திறன் பெறுவதற்காக தீவிரப் பயிற்சியில் சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “புதிய விஷயங்களை முயற்சிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். முழுமையாக கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை தனக்கு சிறு வயதில் இல்லை என்றாலும், அரசியலில் அனுபவம் இல்லாதவர் அல்ல. மே 2023 முதல், டிராஃபோர்டு கவுன்சிலில் ஹேல் வார்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் அவர், அங்கு கிரீன் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2024 ஆம் ஆண்டு கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் தேர்தலிலும் கிரீன் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

தற்போது, அவர் சியான் பெரி, அட்ரியன் ராம்ஸே, கார்லா டென்யர் மற்றும் எல்லி சவுன்ஸ் ஆகியோருடன் இணைந்து, கிரீன் கட்சியின் ஐந்தாவது எம்.பியாக நாடாளுமன்றத்தில் அமர உள்ளார்.

போல்டனில் பிறந்த ஹன்னா ஸ்பென்சர், தனது வாழ்க்கை முழுவதும் கிரேட்டர் மான்செஸ்டரில் வாழ்ந்துள்ளார். நேர்மையான பேச்சும் எளிமையான அணுகுமுறையும் கொண்டவர் என அறியப்படும் அவர், நான்கு மீட்கப்பட்ட கிரேஹவுண்ட் நாய்களின் “வீட்டுத் தோழி” என்றும் தன்னை வர்ணிக்கிறார். இந்த நாய்களும் தேர்தல் பிரச்சாரத்தில் அவருடன் இணைந்து பங்கேற்றது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.