ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்பும் கனடா, அவ்வமைப்பில் “இணை உறுப்பினராக” (Associate Member) இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக உறுப்பு நாடுகளைச் சேர்ப்பதில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் ஐரோப்பிய ஒன்றியம், கனடாவின் இந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, அந்நாட்டுக்கு ‘இணை உறுப்பினர்’ என்ற புதிய அந்தஸ்தை வழங்குவது குறித்த யோசனையை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள கனடியத் தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் கேட்டு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.