செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஸ்கொட்லாந்தில் போதைப்பொருளால் உயிரிழந்தோர் தொகை 11 சதவீதத்தால் அதிகரிப்பு; ஐரோப்பாவிலேயே மோசமான நிலை!

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருளால் உயிரிழந்தோர் தொகை 11 சதவீதத்தால் அதிகரிப்பு; ஐரோப்பாவிலேயே மோசமான நிலை!

1 minutes read

ஸ்கொட்லாந்தில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டில் 11 சதவீதத்தால் அதிகரித்து 1,133 ஆகப் பதிவாகியுள்ளதுடன், ஐரோப்பாவிலேயே மிக மோசமான இறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக ஸ்கொட்லாந்து தொடர்ந்து நீடிக்கின்றது.

ஸ்கொட்லாந்து தேசிய ஆவணக் காப்பகம் (National Records of Scotland – NRS) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டுக்கான இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 116ஆல் அதிகரித்துள்ளதுடன், கடந்த ஒரு தசாப்த காலத்தில் போதைப்பொருள் தாக்கத்தால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

வயது ரீதியான சீரமைப்புகளுக்கு அமைய, அங்கு ஒவ்வொரு பத்து இலட்சம் பேருக்கும் 214 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் நச்சுத்தன்மை பிரதான காரணமாக அமைந்தமை, மரணத்தின் போது உடலினுள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் காணப்பட்டமை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தியமை ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த மரணங்கள் வகைப்படுத்தப்படுவதாக ஸ்கொட்லாந்து தேசிய ஆவணக் காப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.

போதைப்பொருள் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், ஹெரோயின், கொக்கைன் மற்றும் போலி வேலியம் மாத்திரைகளுடன் ‘நைடசீன்ஸ்’ (Nitazenes) எனப்படும் வீரியம் மிக்க செயற்கை ஒபியாயிட்களை பாதாள உலகக் குழுக்கள் கலந்து விநியோகிப்பது பாரிய சவாலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக 2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த மரணங்களில் 22 சதவீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு, அதாவது 247 உயிரிழப்புகளுக்கு நைடசீன்ஸ் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டில் பதிவான 76 மரணங்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பாகும்.

ஸ்கொட்லாந்தில் பதிவான மொத்த உயிரிழப்புகளில் 78 சதவீதத்திற்கு ஹெரோயின் உள்ளிட்ட பாரம்பரிய ஓபியேட்ஸ் மற்றும் ஒபியாயிட் வகை போதைப்பொருட்களே பிரதான காரணியாக இருந்துள்ளன. அதேவேளை, மொத்த மரணங்களில் 52 சதவீதமானவற்றில் கொக்கைன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், தேசிய ஆவணக் காப்பகம் 2008 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான தரவுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடத் தொடங்கிய பின்னர் பதிவான மிக உயர்ந்த கொக்கைன் பயன்பாட்டு இறப்பு வீதம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.