செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வெனிசுலாவில் விரைவில் பொதுத்தேர்தல்: ஐ.நா சபையில் இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்

வெனிசுலாவில் விரைவில் பொதுத்தேர்தல்: ஐ.நா சபையில் இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்

1 minutes read

வெனிசுலாவில் முழுமையான ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

எனினும், குறித்த தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான குறிப்பிட்ட திகதி எதனையும் அவர் தனது உரையில் வெளியிடவில்லை.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை அமர்வில் உரையாற்றிய அவர், வெனிசுலாவில் ஜனநாயக முறைப்படியான தேர்தல்கள் நிச்சயமாக நடைபெறும் என்பதை உலக நாடுகள் முன்னிலையில் மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் தேசிய நிறுவனங்கள் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சிகளுடன் ஏற்கெனவே தமது அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளின் பங்களிப்பும் உள்ளடக்கமும் உறுதிப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வெனிசுலா தனது புதிய மறுமலர்ச்சிக்கான ஜனநாயக மாற்றத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த இடைக்கால ஜனாதிபதி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுதந்திரமான, வளமான மற்றும் ஒருங்கிணைந்த ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.