செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தொழிற்கட்சி மாநாட்டுக்கு வெளியே பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

தொழிற்கட்சி மாநாட்டுக்கு வெளியே பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

1 minutes read

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வரும் ஆளும் தொழிற்கட்சியின் மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே, தடைசெய்யப்பட்ட ‘பலஸ்தீன் அக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக 250க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலர் “நான் பலஸ்தீன் அக்ஷன் அமைப்பை ஆதரிக்கிறேன்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக சுலோக அட்டைகளை ஏந்துவது சட்டவிரோதமானது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சுலோகங்களை அகற்றி போராட்டத்தை கைவிட மறுத்தவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதாகத் தெரிவித்து, பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

‘Defend Our Juries’ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 50 இற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையிலான பொருட்களை உடமையில் வைத்திருந்தமை அல்லது காட்சிப்படுத்தியமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கான பொதுமக்களின் உரிமையை பொலிஸ் திணைக்களம் மதிப்பதாகவும், அதேவேளை பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே தமது பிரதான நோக்கம் எனவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சட்டங்களை பாரபட்சமின்றி நேர்த்தியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் விரிவான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டத்தில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பொலிஸாரின் இந்த கைது நடவடிக்கைகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், இதனை பேச்சு சுதந்திரத்தின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் எனவும் வர்ணித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 94 வயதான பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி மார்கரெட் ஓவனும் உள்ளடங்குகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.