செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் விமானப்படை தள சம்பவம்: பயங்கரவாத குற்றச்சாட்டில் இங்கிலாந்து – ஈரான் இரட்டைப் பிரஜை கைது!

விமானப்படை தள சம்பவம்: பயங்கரவாத குற்றச்சாட்டில் இங்கிலாந்து – ஈரான் இரட்டைப் பிரஜை கைது!

1 minutes read

இங்கிலாந்தின் றோயல் எயார் போர்ஸுக்கு சொந்தமான பெயர்போர்ட் விமானப்படை தளத்தில் இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தயாரானார் என்ற சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்து மற்றும் ஈரானிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வைத்து 25 வயதான இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள இரு குடியிருப்புக்களில் பொலிஸார் தீவிர சோதனைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கிளொஸ்டர்ஷயரில் அமைந்துள்ள குறித்த விமானப்படை தளத்துக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் தொடர்ந்தும் பொலிஸ் பிணையில் உள்ளனர்.

இலண்டனைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜைகளான இவர்கள், அமெரிக்க விமானப்படையினால் பயன்படுத்தப்படும் தளத்தை நோக்கி மூன்று சந்தேகத்திற்துக்கிமான வாகனங்களில் பயணித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த வாகனங்களில் இருந்து பெட்ரோல் மீட்கப்பட்ட போதிலும் வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஷ்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி எவன்ஸ், வெளிநாட்டு தலையீடுகள் உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது எனவும், சிறப்பு குழுவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்ட நபருக்கு 27 வயது என அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 25 என பொலிஸாரால் திருத்தப்பட்டது.

இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரான் செயற்பட்டதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோவும் இச்சம்பவத்தில் வெளிநாட்டு சக்தியொன்றின் பின்னணி தெளிவாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ள தெஹ்ரான், இது தொடர்பில் வியாழக்கிழமை ஈரானுக்கான இங்கிலாந்து தூதுவரை அழைத்துக் கலந்துரையாடியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஈரானுக்கு எதிரான தற்காப்பு தாக்குதல்களுக்காக அமெரிக்கா குண்டுவீச்சு விமானங்கள் இந்த தளத்திலிருந்தே புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.