செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஆய்வுக்கூட பெண் ஊழியரின் மரணத்தால் தொற்றுநோய் பரவும் அபாயமில்லை: ரஷ்யா அறிவிப்பு

ஆய்வுக்கூட பெண் ஊழியரின் மரணத்தால் தொற்றுநோய் பரவும் அபாயமில்லை: ரஷ்யா அறிவிப்பு

0 minutes read

சைபீரியாவில் அமைந்துள்ள பிளேக் நோய் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் எதுவும் இல்லை என ரஷ்யாவின் சுகாதார கண்காணிப்புப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

28 வயதான குறித்த ஆய்வக ஊழியர், இதுவரை கண்டறியப்படாத காரணத்தினால் ஏற்பட்ட தீவிர நுரையீரல் அழற்சி (நிமோனியா) பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பத்தில் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, குறித்த பெண் உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணங்கள் மற்றும் மேலதிக தகவல்களை உடனடியாக வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் ரஷ்ய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் இதுவரை விரிவான தகவல்களை பகிரங்கப்படுத்தவில்லை.

ஆய்வக ஊழியரின் இந்தத் திடீர் மரணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச மட்டத்திலான தலைவர்களிடையே தீவிர அவதானத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.