செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்து பாடசாலைகளில் மாணவர்களின் தொலைபேசிகளுக்கு முழுமையான தடை!

இங்கிலாந்து பாடசாலைகளில் மாணவர்களின் தொலைபேசிகளுக்கு முழுமையான தடை!

1 minutes read

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலை நேரங்களில் பைகளிலோ அல்லது ஆடைகளின் பொக்கெட்டுகளிலோ கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வகையில் புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை முழுமையாக அமுலுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது சில பாடசாலைகளில் அமுலில் உள்ள, வெளியே தெரியாமலும் சத்தமின்றியும் பைகளில் தொலைபேசிகளை வைத்திருக்கும் நடைமுறையை விட இது மிகவும் கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை என்பது கல்வி கற்பதற்கும் நட்பை வளர்ப்பதற்குமானது எனவும், சமூக ஊடகங்களை பார்வையிடுவதற்கான இடமல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ள கல்விச் செயலாளர் லூசி பவல், இந்த புதிய நடைமுறை மாணவர்களின் கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாடசாலை நிர்வாகங்களுக்கு தெரிவுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் தொலைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்கத் தேவையான பெட்டகங்களை அமைப்பதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என அதிபர்களின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இங்கிலாந்து முழுவதும் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமானவை என சிறுவர் விவகாரங்களுக்கான ஆணையாளர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.