செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சீனாவுக்கு கணினிச் சில்லுகள் கடத்தப்பட்டதாக என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி மீது குற்றச்சாட்டு

சீனாவுக்கு கணினிச் சில்லுகள் கடத்தப்பட்டதாக என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 minutes read

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட தொடர்பின் ஊடாக, ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப கணினிச் சில்லுகள் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெய்ஜிங்கின் உளவாளியாக செயற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகப் பெண்மணியான அலிஸ் ஹுவாங்குடன், ஜென்சன் ஹுவாங் பேணி வந்த தொடர்புகளே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன.

அமெரிக்காவின் ‘தி இன்பர்மேஷன்’ ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குறித்த பெண்ணுடன் தொடர்புடைய இரகசிய வலையமைப்பைப் பயன்படுத்தி என்விடியாவின் அதிநவீன H100, H200 மற்றும் A100 ரகங்களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் கணினிச் சில்லுகள் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட சில்லுகளில் ஒரு பகுதி, சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட் மற்றும் முக்கிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையங்களை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கையொன்றின் திட்டமிட்ட இலக்காக மாற்றப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜென்சன் ஹுவாங் தனது தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட தவறை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், மேலதிக விபரங்கள் எதனையும் பகிரங்கப்படுத்தவில்லை.

அதேவேளை, என்விடியா நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர் சபை இந்த விவகாரம் குறித்து உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளிப்புற சட்ட ஆலோசகர்களை நியமித்துள்ளது. எனினும், நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயங்களோ அல்லது வர்த்தக இரகசியங்களோ சமரசம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவதற்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என பணிப்பாளர் சபை தெளிவுபடுத்தியுள்ளது. மறுபுறம், இந்த உளவு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என சீனா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்த சர்ச்சையின் எதிரொலியாக, பங்குச் சந்தையில் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு வர்த்தக அமர்வுகளில் மாத்திரம் சுமார் 430 பில்லியன் டொலர்களினால் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் உடனடியாக விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளதுடன், கணினிச் சில்லுகளுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து அமெரிக்காவில் கடுமையான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிந்திருந்த விடயங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. சீனாவுடன் தொடர்புடைய குறித்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், வர்த்தகத் திணைக்களத்தின் நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் என்விடியாவின் கூட்டாண்மை நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு சந்தையில் அதன் எதிர்கால வர்த்தக நிலைப்பாடு தொடர்பில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நாளை முதல் நுழைவு சீட்டுகள் விநியோகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.