செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் Brexit மறுசீரமைப்பு: உணவு விதிகளில் இங்கிலாந்து கருத்துக் கூறலாம்; ஆனால் வாக்குரிமை இல்லை!

Brexit மறுசீரமைப்பு: உணவு விதிகளில் இங்கிலாந்து கருத்துக் கூறலாம்; ஆனால் வாக்குரிமை இல்லை!

1 minutes read

பிரேக்சிட் (Brexit ) மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவு சார்ந்த கொள்கைகளில் இங்கிலாந்துக்குத் தனது கருத்துகளை முன்வைக்கும் உரிமை வழங்கப்படும் எனவும், எனினும் வாக்களிக்கும் உரிமை இருக்காது எனவும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் துறை அமைச்சர் ஹேமிஷ் பால்கனர் தெரிவித்தார்.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் ஊடாக, பிரேக்சிட்டிற்குப் பின்னர் உணவு ஏற்றுமதியின் போது விதிக்கப்பட்ட அதிகப்படியான ஆவணப் பணிகள் மற்றும் எல்லைச் சோதனைகள் குறைக்கப்படவுள்ளன. உதாரணமாக, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்தின் சில பாரவூர்திகளுக்கு ஏற்றுமதி சுகாதாரச் சான்றிதழ்கள் உட்பட 300 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்கள் தேவைப்பட்ட நிலைமை இதனால் மாற்றியமைக்கப்படும். மேலும், வர்த்தகச் செலவுகள் குறைவதால் பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

உணவு வர்த்தக மறுசீரமைப்பு மூலம் இங்கிலாந்து பொருளாதாரத்துக்கு மேலதிகமாக 5 பில்லியன் பவுண்ட் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகவுள்ள இந்த முழுமையான ஒப்பந்தம், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.4 சதவீத வளர்ச்சியைச் சேர்க்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உமிழ்வு வர்த்தக விதிகள் மற்றும் இளைஞர்களுக்கான நடமாட்டத் திட்டம் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் ரீஃபார்ம் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தின் இந்த நகர்வைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இங்கிலாந்து விதிகளை உருவாக்கும் நாடாக இல்லாமல், பிறர் விதிக்கும் விதிகளுக்குக் கட்டுப்படும் நாடாக மட்டுமே மாறும் என அக்கட்சிகள் எச்சரித்துள்ளன.

மேலும், எதிர்காலத்தில் இங்கிலாந்தின் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தால் தமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், இந்த ஒப்பந்தத்தில் வெளியேறும் பிரிவு ஒன்றை இணைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.