இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மீண்டும் ஒருமுறை வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் வட்டி விகிதங்கள் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திலும் கால் சதவீத (0.25%) உயர்வைக் கொண்டுவருவதற்குத் தாம் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டில் மத்திய வங்கியின் வட்டி விகிதம் சுமார் 5 சதவீதத்தை எட்டக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், ஹியூ பில்லின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
தற்போது 3.5 சதவீதமாகப் பதிவாகியுள்ள பணவீக்கம், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக அடுத்த வசந்த காலத்தில் 5 சதவீதத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.