செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சுவிட்சர்லாந்தில் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு!

சுவிட்சர்லாந்தில் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு!

1 minutes read
HTML tutorial

சுவிட்சர்லாந்தில் ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக இன்று (29) பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் முடிவு, நாட்டின் நீண்டகால நடுநிலைக் கொள்கையிலும் ஆயுத உற்பத்தித் தொழிற்துறையின் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து, 1907ஆம் ஆண்டு ஹேக் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடுநிலைமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளைப் பின்பற்றி வருகிறது. இதன்படி, நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களைத் தவிர, ஆயுத மோதல்களில் தலையிடுவதையும் மோதலில் ஈடுபடும் தரப்பினருக்கு இராணுவ ஆதரவு வழங்குவதையும் தவிர்க்க வேண்டியுள்ளது.

எனினும், 2022ஆம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் இந்த நடுநிலை நிலைப்பாடு சர்வதேச அளவில் விவாதத்துக்கு உள்ளானது.

குறிப்பாக, ஏற்கனவே சுவிட்சர்லாந்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் கவசப் போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்ன் அரசாங்கம் அனுமதி மறுத்தது.

இதன் காரணமாக, சுவிட்சர்லாந்தின் ஆயுதங்களை வாங்குவதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. இதனால் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அந்நாட்டின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலைமை, சுவிட்சர்லாந்தின் உள்நாட்டு ஆயுத உற்பத்தித் துறையின் எதிர்காலம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் தேவைகளுக்கான உற்பத்தித் திறன் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சட்டமாற்றங்களுக்கு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஆதரவு தெரிவித்தது.

எனினும், இந்த முடிவுக்கு எதிராகத் தரப்புகள் முன்னெடுத்த நடவடிக்கைகளால், சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக நடைமுறையின் கீழ் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலை உருவானது.

இந்நிலையில், ஆயுத ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா அல்லது தற்போதைய கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டுமா என்பதை மக்கள் இன்று தமது வாக்குகள் மூலம் தீர்மானிக்கவுள்ளனர்.

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் - ஈரான்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.