செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கலவரங்களை கட்டுப்படுத்த இத்தாலியில் கடும் சட்டங்கள் அமல்: பெற்றோருக்கு எச்சரிக்கை!

கலவரங்களை கட்டுப்படுத்த இத்தாலியில் கடும் சட்டங்கள் அமல்: பெற்றோருக்கு எச்சரிக்கை!

1 minutes read

இத்தாலியில் இடம்பெறும் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மிகக் கடுமையான புதிய சட்டங்கள் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மிலான் நகரில் கடந்த வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் பொலிஸாருடன் ஏற்பட்ட கடுமையான மோதலாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் ஜோர்ஜியா மெலோனி இந்த அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

எரிவாயு விலையேற்றம் காரணமாக அந்நாட்டின் பாஸ்தா உற்பத்தி மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

எனினும், இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் கலவரமாக உருவெடுத்ததில் மிலான் நகருக்கு சுமார் ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தீவிரமடைந்துவரும் இத்தகைய போராட்டங்களைக் கையாள்வதற்கும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் ஏதுவாக 500 இராணுவ வீரர்களைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய மற்றும் அபாயகரமான செயற்பாடுகளில் ஈடுபடும் சிறுவர்களைத் தடுத்து வைப்பதற்கு பொலிஸாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துச் சேதங்களுக்கும் அவர்களின் பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சட்ட விதிகளின்படி, போராட்டங்களின்போது வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 20,000 யூரோ வரை தண்டப் பணமும் விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலான் நகரில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சுமார் 270 இளைஞர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.