செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று

1 minutes read

 

கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய பதிவு:

ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான் விரும்பினேன். அதற்குள் எப்படியோ வாட்ஸப் க்ரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்காகவே இதை பொதுவில் பகிர்கிறேன்.

கொரோனா பாசிட்டிவ்

கொரோனா பாசிட்டிவ்

எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிட்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அட்மிட் ஆகியிருக்கிறேன்

கொரோனாவின் நேரடி சாட்சியம்

கொரோனாவின் நேரடி சாட்சியம்

இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன். கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது.

பேரமைதியாக மருத்துவமனை

பேரமைதியாக மருத்துவமனை

பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ‘ இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்’ என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.