தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்றா?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் ஆளுநர் பன்வாரிலால் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே ஆளுநர் பன்வாரிலால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

அத்துடன் அவர் உடல் ஆராக்கியத்துடன் உள்ளாரென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்