பக்ரீத் பண்டிகை | குடியரசுத் தலைவர் வாழ்த்து

தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தியாகத்தையும், நட்பையும் குறிக்கும் பக்ரீத் பண்டிகை, அனைவரின் நலனுக்காக பணியாற்ற வேண்டியதை எடுத்துரைக்கிறது.

இந்த மகிழ்ச்சியான நாளில் பரஸ்பர நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம். நாட்டு மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

ஆசிரியர்