கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை | தமிழக முதலமைச்சர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

அரசு நிர்ணயித்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் –  தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்