தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்

தமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, நோய் பரவலைக் கட்டுப்படுத்த இம்மாதம் முழுதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாநிலம் முழுதும் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று கடைகள் எதுவும் திறக்கப்படாது என்பதுடன், போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள், மருந்து கடைகள் மட்டுமே செயற்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தோடு, ஊரடங்கு விதிமுறைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

ஆசிரியர்