இந்தியப் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

காணொளி காட்சி வாயிலாக நாளை காலை 10:30 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் எட்டு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ளவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியப் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்