சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியது. 

ஆசிரியர்