Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சென்னையில் 1,187 பேருக்கு புதிதாக கொரோனா!

சென்னையில் 1,187 பேருக்கு புதிதாக கொரோனா!

2 minutes read
சென்னையில் 1,187 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 862 பேர்.

விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 18 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 556 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் – 69
செங்கல்பட்டு – 437
சென்னை – 1187
கோவை – 385
கடலூர் – 221
தர்மபுரி – 39
திண்டுக்கல் – 138
ஈரோடு – 128
கள்ளக்குறிச்சி – 30
காஞ்சிபுரம் – 315
கன்னியாகுமரி – 128
கரூர் – 14
கிருஷ்ணகிரி – 12
மதுரை – 46
நாகை – 34
நாமக்கல் – 30
நீலகிரி – 18
பெரம்பலூர் – 24
புதுக்கோட்டை – 155
ராமநாதபுரம் – 57
ராணிப்பேட்டை – 178
சேலம் – 191
சிவகங்கை – 70
தென்காசி – 93
தஞ்சாவூர் – 88
தேனி – 367
திருப்பத்தூர் – 63
திருவள்ளூர் – 495
திருவண்ணாமலை – 81
திருவாரூர் – 56
தூத்துக்குடி – 60
திருநெல்வேலி – 117
திருப்பூர் – 53
திருச்சி – 106
வேலூர் – 178
விழுப்புரம் – 127
விருதுநகர் – 90
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 1
உள்நாடு – 9
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

மொத்தம் – 5,890

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More