March 26, 2023 11:03 pm

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்யானந்தா இன்று வெளியிட்டுள்ளார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று 22-ம் தேதி இன்று அதை முறையாக அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.

கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்