புதுச்சேரியில் இ-பாஸ் முறை இரத்து!

புதுச்சேரியில் இன்றுமுதல் (ஞாயிற்றுக்கிழமை) இ-பாஸ் முறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமான அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இ-பாஸ் முறை மத்திய அரசின் உத்தரவுபடி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்திற்காக மாநிலத்துக்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான செயற்பாட்டிற்கும் எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

அத்துடன், இதனை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டால் அது உட்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்குமான இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்