காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்ந்தும் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என தகவல்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணியளவில் முடிந்தது.

அடுத்த 6 மாத காலத்துக்குள் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், அதுவரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆசிரியர்