பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி  புது டெல்லியில்  உள்ள இராணுவ மருத்துவமனையில் கடந்த ஒகாஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவரது மூளையில் இரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட சிறிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது  அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்