எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதா? | மருத்துவமனை பதில்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலை பற்றி மருத்துவ நிர்வாகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பல்துறை மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்