மயக்க நிலையில் இருந்து மீண்ட எஸ்.பி.பி | சரண்

90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் - எஸ்.பி.பி. சரண்எஸ் பி பாலசுப்பிரமணியம்கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

 பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.

ஆசிரியர்