தீவிரவாதத்திற்கு ஆதரவாக நாடகமாடும் பாகிஸ்தான் | இந்தியா சாடல்

எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு தான் பலியாகிவிட்டதாக பொய் முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாடுகிறது என இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினராக பாகிஸ்தான் இல்லாத நிலையில், விதிகளை மீறி ஐ.நா.சபையில் தீவிரவாதம் குறித்த அறிக்கையை அந்நாட்டு ஐ.நா. பிரதிநிதி தாக்கல் செய்த நிலையில் இந்தியா இதனை விமர்சித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் பொய்யை ஆயிரம் முறை தொடர்ந்து கூறினாலும் அது உண்மையாகி விடாது என தெரிவித்துள்ளது.

எனினும் தீவிரவாத தடுப்பு குறித்து பாகிஸ்தான் கூறி வரும் ஐந்து பெரிய பொய்கள் இந்த அறிக்கை வாயிலாக அம்பலமாகி விட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது.

தங்களது நாட்டில் இருந்து அல் கொய்தாவை அழித்து விட்டதாக பாகிஸ்தான் கூறியதை சுட்டிக்காட்டிய இந்தியா, அங்குதான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது என்பது பாகிஸ்தான் பிரதிநிதிக்கு தெரியாமல் போய்விட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆசிரியர்