சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் மருத்துவரிடம் கூறியது என்ன? | வெளியான புதுத் தகவல்!

தனக்கு எந்த ஆசையும் இல்லை எனவும், தான் வாழ விரும்பவில்லை எனவும் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுசாந்த் சிங் அதீத மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக  தெரிவிக்கப்படும் நிலையில் இது குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சுஷாந் சிங்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,   “சுஷாந்த் சிங் நவம்பர் 27ஆம் திகதி  2019அன்று மும்பை இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மோசமான நிலை குறித்து அவருடைய மேனேஜர் ஸ்ருதி மோடி அவருடன் தொடர்புகொண்டு பேசினார்.  மறுநாள் அவரை பரிசோதித்த மருத்துவரிடம்  தான் மன அழுத்ததுடன் போராடிக் கொண்டு இருப்பதாகவும்,  சரியாக தூக்கம் வரவில்லை.  பசிக்கவில்லை என்றும்  சுஷாந்த் கூறியுள்ளார்.

மேலும் தான் எதையும் விரும்பவில்லை.  வாழ விரும்பவில்லை என்றும்  10 நாட்களாக இதேபோன்று இருப்பதாக சுஷாந்த் சிங் கூறியதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்