Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா லடாக் எல்லையில் சீனா துப்பாக்கிச்சூடு | இந்தியா குற்றச்சாட்டு

லடாக் எல்லையில் சீனா துப்பாக்கிச்சூடு | இந்தியா குற்றச்சாட்டு

1 minutes read

கிழக்கு லடாக் எல்லையில், இந்திய நிலைகளை நெருங்கி வர முயன்ற சீனப் படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, இந்திய தரப்பு துப்பாக்கியால் சுட்டதாக கூறுவது பொய் என இராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் த்சோ ஏரி பகுதியில்  இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய இராணுவம் , கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தின்போது, சீனப் படையினர் இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயன்றதாகவும் இந்திய வீரர்கள் அந்த முயற்சியை தடுத்தபோது, அச்சுறுத்தும் வகையில் சீன வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் மோதல் போக்கை விலக்கிக்கொள்வது, பதற்றத்தை தணிப்பது என்பதில் உறுதியாக இருந்தபோதிலும், சீனா தரப்பு பதற்றத்தை அதிகரிக்கும் வேலைகளை செய்துவருவதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு நிலையிலும் இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அத்துமீறியது இல்லை என்றும் துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்ட ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.

சீன இராணுவம் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறியும் இராணுவ மற்றும் அரசபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டே எல்லை அத்துமீறல் முயற்சிகளிலும் ஈடுபடுவதாக இந்திய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா மிக மோசமான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடனும், முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டதாகவும் அமைதியைப் பேணும் அதேசமயத்தில் தேசத்தின் இறையாண்மையையும் எல்லைகளையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More