லடாக்கின் எல்லையில் சீன இராணுவத்தினர் குவிப்பு? | போரா?

லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் தங்களது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ரெச்சின்லா என்னும் இடத்தில் ஒரு படையணியையும், ஸ்பாங்குர் ஏரி அருகில் மற்றொரு படையணியையும் சீன இராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை முக்ரி என்ற இடத்தில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய இராணுவத்தினர் தடுத்துள்ளதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் மிகப்பெரிய தாக்குதல் வரும் நாட்களில் நிகழ்க்கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்