இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு!

பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன.

குறித்த ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன.  இந்த விமானங்கள் 17 ஆவது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில்  இணைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரான புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்