ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைவு

பிரான்ஸிலிருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (விாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 59000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்தது.

முதற்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29ஆம் திகதி பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்தன.

இந்த நிலையில் இந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையில் இணையும் நிகழ்வு ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்றது.

அனைத்து மத பூஜைகளுடன் நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர் ரஃபேல் போர் விமானங்களை இயக்கி இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி சாகசம் படைத்தனர்.

ரஃபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது. இதன் சிறப்பு அம்சமே எதிரிநாட்டினரின் ரேடாரிலிருந்து தப்பக் கூடியது.

600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரை

ஆசிரியர்