டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா மீண்டும் அனுமதி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா மீண்டும் அனுமதி

உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

மீண்டும் ஆகஸ்ட் 18- ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்