மாநிலங்களவையில் 25 சட்டமூலங்கள் நிறைவேற்றம் | அவைத்தலைவர்

மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மாநிலங்களவையில் 25 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) பகல் 1 மணிக்கு அவை நேரம் முடிவடைந்ததும் இதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

இதன்போது அவர் கூறுகையில், “திட்டமிட்ட அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 சட்டமூலங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அமளி காரணமாக 3.15 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அவையின் மொத்த அலுவல் செயற்பாட்டு நேரத்தின் 57%  நேரம் செலவிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்து.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைந்தமை  குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்