Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

1 minutes read

தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி-  தமிழக அரசுதமிழக அரசுசென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அக்.1ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்.1ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி.

* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்.

* பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம்.

* ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தல்

* ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More