Wednesday, January 27, 2021

இதையும் படிங்க

இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...

இலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...

வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது

குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...

கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!

நூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...

பைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...

சிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது!

அரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

இந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி | இலங்கைக்கும் கிடைக்குமா?

இந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது? அது தடுப்பூசியாக வருமா? சொட்டு மருந்தாக வருமா?

கொரோனா சிக்கலில் மாட்டி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது உலகம். பல திசைகளில் இருந்தும் தடுப்பூசிகள் கைகொடுக்க ஓடி வந்துகொண்டிருக்கின்றன.

எது முதலில் களத்துக்கு வந்து கை கொடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

ஆக்ஸ்ஃபோர்டு – அஸ்ட்ராஜெனேகா, ஃபைசர், மாடர்னா, ஸ்புட்னிக் V ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் வெற்றியை அறிவித்துள்ளன.

ஆனால், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமான இந்தியா, தானே ஆராய்ச்சி செய்து உருவாக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்? அந்த பரிசோதனை எப்படி உள்ளது?

இந்தியத் தடுப்பூசியான கோவேக்சின் ஹைதராபாத்தில் இருந்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட கிளினிகல் பரிசோதனையில் உற்சாகமான அறிகுறிகள் தென்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறுகிறார்.

ஆங்கிலத்தில் கிளினிகல் பரிசோதனை என்று சொல்லப்படுவது, ஆராய்ச்சிக்கூட சோதனைகள் முடிந்து நோயாளிகளுக்கு மருந்தை செலுத்தி சோதிப்பதைக் குறிக்கும். (இதை தமிழில் நாம் பண்டுவப் பரிசோதனை என்று வேண்டுமானால் கூறலாம்).

“இந்தியாவில் கிளினிகல் பரிசோதனை மேற்கொள்வது கடினமான பணிகளில் ஒன்று. மருந்தை போட்டுக்கொள்ள முன்வந்த தன்னார்வலர்களை நான் பாராட்டவேண்டும். ஏனெனில், இந்தியாவில் தடுப்பூசியின் திறனை சோதனையை நடத்தும் வெகுசில முன்னோடி நிறுவனங்களில் எங்களுடையதும் ஒன்று.

இது முடிய கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனால், உலக அளவிலான விதிமுறைகளை நாங்கள் பின்பற்றியே செய்கிறோம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கிருஷ்ண எல்லா.

தடுப்பூசி திறன் சோதனைக்காக தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆள்கள் மத்தியில் நோய்த் தாக்கத்தின் விகிதம் குறைவாக இருக்கும்.

எல்லா தடுப்பூசி பரிசோதனையிலும் இது நடக்கும். ஆனால், ஒவ்வொரு தடுப்பூசியின் சோதனையிலும், இப்படி நோய்த் தாக்கும் விகிதம் எந்த அளவு குறைகிறது என்பது மாறுபடும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள் திரளின் இனம், மரபணு தன்மைகளுக்கு ஏற்பவும் ஒரு தடுப்பூசியின் நோய்த் தடுக்கும் திறன் மாறுபடும்.

அதனால்தான், பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசி பரிசோதனையை பல்வேறு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மேற்கொள்கின்றன.

எடுத்துக்காட்டாக இந்தியாவில், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி என்ற மருந்து நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கான கிளினிகல் பரிசோதனையை இந்தியாவில் மேற்கொண்டுள்ளது.

பிரிட்டனில் உருவாகும் ஆக்ஸ்ஃபோர்ட் – ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கான கிளினிகல் பரிசோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டுள்ளது.

மேற்கொண்ட தடுப்பூசிகள் இந்திய மக்களின் மரபணு, இனவழிப் பின்னணியில் எப்படி வேலை செய்கிறது என்பதை இந்தியர்களுக்கு அளித்து இந்த நிறுவனங்கள் பரிசோதிக்கும்.

உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்வதும், சேகரித்து வைப்பதற்கான குளிர்ப்பதன வசதி குறைவும் இந்தியா சந்திக்கும் இன்னொரு பிரச்சனை.

இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டறிவதில் தங்கள் பாரத் பயோடெக் நிறுவனம் ஓரடி முன்னால் இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ண எல்லா.

“ஊசியாகப் போடுவது மிக கடினம் என்று நாங்கள் பார்க்கிறோம். இதற்காக நாங்கள் ஒரு மாற்றுத் திட்டத்தை உருவாக்க முயல்கிறோம். ஊசியாகப் போடுவதற்குப் பதிலாக மூக்கில் சொட்டு மருந்தாகப் போடக்கூடியவகையில் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கப் பார்க்கிறோம். இப்படிச் செய்தால் அதை ஒரு அங்கன்வாடிப் பணியாளர் மூலம் கூட மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட முடியும்” என்று பிபிசியிடம் கூறினார் கிருஷ்ண எல்லா.

மூக்கில் ஸ்பிரே செய்யும் வகையிலான தடுப்பு மருந்து ஒன்றினை சீனா கூட பரிசோதனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன. ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விதமான தடுப்பு சொட்டுமருந்துகள் வந்தால், அதை மக்கள் அவர்களாகவே கூட போட்டுக்கொள்வார்கள். சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் பயிற்சி அளிக்கவேண்டிய சுமை மிகப்பெரிய அளவில் குறையும்.

“இந்தியாவில் உற்பத்திச் செலவு குறைவு. இதனால் ஏற்படும் ஆதாயத்தை நுகர்வோர் பெற முடியும். எடுத்துக்காட்டாக ரோட்டா வைரஸ் தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உலக அளவில் அந்த தடுப்பூசி டோஸ் ஒன்றின் விலை 65 டாலராக இருந்தது. அந்த விலையை குறைத்துக் குறைத்து நாம்தான் ஒரு டாலராக ஆக்கினோம். எனவே, கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியையும் அதிகரித்தால் விலை குறையும்” என்கிறார் கிருஷ்ண எல்லா.

கோவேக்சின் மட்டுமில்லாமல், இந்தியாவில் இன்னொரு கொரோனா தடுப்பூசியும் உருவாக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தில் இருந்து இயங்கும் ஜைடஸ் கேடில்லா என்ற நிறுவனம் அந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.

“நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பரிசோதனைகள் நடக்கின்றன. அவற்றை நாங்கள் மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு தகவல்களை இந்த நிலையில் நாங்கள் தர முடியாது” என்று பிபிசியிடம் தெரிவித்தார் இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஷார்வில் பட்டேல்.

பாரத் பயோடெக், ஜைடஸ் கேடில்லா இரண்டுமே தங்கள் மருந்து எப்போது வரும் என்று காலக்கெடுவைத் தெரிவிக்க விரும்வில்லை. ஆனால், இரு நிறுவனங்களுமே அடுத்த ஆண்டு உலகத் தடுப்பூசி சந்தையில் தாங்களும் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றன.

இதையும் படிங்க

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு!

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...

தண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...

தொடர்புச் செய்திகள்

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!

நூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...

பைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...

சிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது!

அரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? | நிலாந்தன்

வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...

பத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்

வடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார்  12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

புதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி...

நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பது ஜனநாயக அழிப்பாகும் | சர்வதேச அமைப்பு அறிக்கை

அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பதன் ஊடாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப்...

126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தின்...

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...

பிந்திய செய்திகள்

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு!

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...

அனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்!

குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

துயர் பகிர்வு