செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

1 minutes read

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி அணி வகுத்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 6வது நாளாக கடும் குளிருக்கும் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக் கொண்டு வர மத்திய அமைச்சர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பா.ஜ.கவின் தலைவர்கள் சிலர் இரண்டாவது நாளாக விவாதங்களை முன்னெடுத்திருந்த நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் கொரோனா மற்றும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளதுடன், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டெல்லி விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்பது குறித்து இன்று தங்களுக்குள் பேசி முடிவெடுக்க இருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.