Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தது!

கொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தது!

0 minutes read

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 903 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே 1 இலட்சத்து 28 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More