செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!

விவசாயிகளுடன் மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!

0 minutes read

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

சிலேட்டில் புதிதாக எழுதுவதுபோல் தொடங்க வேண்டும். முன்னோக்கி செல்வதற்கு இதுதான் வழி. என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கடந்த காலத்தை ஒதுக்கி வைக்க மறுக்கும் அரசிடம் ஆக்கப்பூர்வமான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.