செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 5 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிடவுள்ளதாக தகவல்!

5 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிடவுள்ளதாக தகவல்!

1 minutes read

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அரசு இந்த வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் வரும் 4-ம் திகதி தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

குறித்த மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதில் தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. மேற்குவங்கத்திலும் அசாமிலும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக்கூட்டணி போட்டியிடுகிறது. கேரளாவில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல்கட்டப் பட்டியலை இந்த வாரத்தில் பாஜக தலைமை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.