Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை!

கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை!

1 minutes read

கொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இங்கு, 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், எதிர்வரும் 27ஆம் திகதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மேற்கு வங்கத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று, கொல்கத்தா ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

இக்கூட்டத்தில், பொலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள், பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More