தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், #WomensDay வாழ்த்துகள்.
திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!” எனத் தெரிவித்துள்ளார்.