Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒரேநாளில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது!

ஒரேநாளில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது!

1 minutes read

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 503 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 62 இலட்சத்து 57 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 36 இலட்சத்து 41 ஆயிரத்து 606 தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 24 இலட்சத்து 28 ஆயிரத்து 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 256 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More