Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!

இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!

1 minutes read

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது.

இந்தநிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அமெரிக்கா
*கொரோனா தடுப்பூசியினை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் மீதான ஏற்றுமதித் தடை நீக்கப்படுகின்றது.
*கொரோனா தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகளுக்கான மூலப்பொருட்கள், பரிசோதனைக் கருவிகள், சுவாசக் கருவிகள், மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை அனுப்புகிறது.
*நியூயோர்க்கிலிருந்து அனுப்பப்பட்ட 328 உயிர்வாயுக் கலன்கள் புது டில்லி சென்றடைந்துள்ளன.

பிரித்தானியா
*100 சுவாசக் கருவிகளும், காற்றிலிருந்து உயிர் வாயுவைப் பிரித்தெடுக்கும் 95 கருவிகளையும் முதற்கட்டமாக அனுப்பியுள்ளது.
*495 குறித்த கருவிகளுடன் வேறு சில மருத்துவப் பொருட்களையும் பிரித்தானியா அனுப்பி வைத்துள்ளது.

பிரான்ஸ்
*உயிர்வாயு உற்பத்தி செய்யக்கூடிய 8 பெரிய கருவிகளை அனுப்பி வைக்கவுள்ளது.
*அயர்லாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உயிர்வாயுவைப் பிரித்தெடுக்கும் சாதனங்கள், சுவாசக் கருவிகள் ஆகியவற்றை அனுப்புகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More