செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

0 minutes read

தலைநகர் டெல்லியில் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நேரம் இது. திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி திங்கட்கிழமை முதல் தொழில் வளாகங்களில் உள்ள உற்பத்தி அலகுகள் சில வரம்புகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட இடங்களில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.